எங்களைப் பற்றி

 

 

 

 

 

வடமேல் மாகாண ஆயுர்வேத திணைக்களம் 10 ஆயுர்வேத வைத்தியசாலைகளையும் மற்றும் 34 மத்திய மருந்தகங்களையும் உள்ளடக்கியது. இந்த வைத்தியசாலைகள் மற்றும் மத்திய மருந்தகங்களினால் உள் நோயாளர், வௌி நோயாளர்களுக்கு வைத்திய சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. குருணாகல், புத்தளம் மாவட்டங்களில் சமூக வைத்திய சேவையினூடாக ​​​நோய் நிவாரண செயற்றிட்டம், சுகாதார மேம்படுத்தல் மேலும், சுகாதார பராமரிப்பு செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன . வடமேல் மாகாண ஆயுர்வேதத் திணைக்களம் 504 மொத்த அலுவலர்களை உள்ளடக்கியது. வடமேல் மாகாண ஆயுர்வேதத் திணைக்களம் ஆயுர்வேத ஆணையாளரினால் பராமரிக்கப்படுகிறது. மேலும் நிருவாக, நிதி, திட்டமிடலும் அபிவிருத்தி, தர நிர்ணய மேலும், உற்பத்தி போன்ற 5 பிரிவுகளைக் கொண்டுள்ளது.